#america | #Chess
செஸ் வரலாற்றில் முதல்முறையாக இரண்டு சாம்பியன்..!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நார்வேவைச் சேர்ந்த நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சனும் ரஷ்ய வீரர் இயன் நெப்போம்னியாட்ச்சியும் (Ian Nepomniachtchi) சாம்பியன் பட்டத்தை பகிர்ந்துகொண்டனர். இறுதிச்சுற்றும் டை-பிரேக்கர் சுற்றும் தொடர்ச்சியாக டிரா ஆனதால் இருவரும் சாம்பியன்ஷிப் பட்டத்தை பகிர்ந்துகொள்ள சம்மதித்தனர். மின்னல் வேகத்தில் நடைபெறும் பிளிட்ஸ் செஸ் தொடர் வரலாற்றில் ஓபன் பிரிவில் சாம்பியன் பட்டம் பகிர்ந்துகொள்ளப்படுவது இதுவே முதல் முறையாகும்.