டி20 தொடர் - வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்த இந்தியா

Update: 2024-10-13 07:21 GMT

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் குவித்தது. பவுண்டரி மழை பொழிந்த தொடக்க வீரர் சஞ்சு சாம்சன், அதிரடி சதம் விளாசினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 75 ரன்கள் அடித்தார். சிக்சர்களைப் பறக்கவிட்ட ஹர்திக் பாண்டியா 18 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 298 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய வங்கதேசம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக வென்ற இந்தியா, வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது

Tags:    

மேலும் செய்திகள்