Ind Vs Aus பிரிஸ்பேன் டெஸ்ட் - குறுக்கே வந்த கௌசிக் (மழை) - ரசிகர்கள் ஏமாற்றம்
பிரிஸ்பேன் (Brisbane) நகரில் இன்று காலை தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். கடந்த போட்டியில் ஆடிய அஸ்வின், ஹர்ஷித் ராணாவிற்கு பதிலாக ஜடேஜா மற்றும் ஆகாஷ் தீப் இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து பேட்டிங்கை ஆரம்பித்த ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்து இருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டு தொடர முடியாமல் ஆனது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துகொள்ளப்பட்டது. ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் கவாஜா 19 ரன்களுடனும் மெக்ஸ்வீனி 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இரண்டாம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி நாளை காலை 5.50 மணிக்கு தொடங்க உள்ளது.