இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (12-12-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-12-14 16:02 GMT

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்...

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்புற சாலைகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம், கடந்த 5ஆம் தேதி வெளியாகி, ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது.

கிருமிகளுக்கு எதிரான புதிய மருந்தை கண்டுபிடித்து இந்திய மருத்துவர்கள் சாதனை....

ஆண்டிபயாடிக்ஸ்களுக்கு கட்டுப்படாத கிருமிகளுக்கு எதிரான புதிய மருந்தை கண்டுபிடித்து இந்திய மருத்துவர்கள் சாதனை....

மனிதர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் போது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்