செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷை நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டிங் லிரனை வீழ்த்தி, 18 வயதான குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு செஸ் சாம்பியனான இந்தியர் என்ற பெருமையை பெற்ற குகேஷ்க்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்புகொண்டு மனதார வாழ்த்தியுள்ளார்.