நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ்- ரேவதி தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் தீரன் டேக்வாண்டோ எனப்படும் தற்காப்பு பயிற்சியில் தூள் கிளப்பி வருகிறார். சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற 8-வது இந்திய TIA OPEN TAEKWONDO CHAMPIONSHIP போட்டியில் பங்கேற்று ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப்பதக்கம் வென்று அசத்தி உள்ளார். நடிகர் சூர்யா, நடிகர் மாதவன் ஆகியோரின் மகன்கள் விளையாட்டு போட்டியில் கலக்கி வருவது போல் நடிகர் சிபிராஜின் மகனும் விளையாட்டு போட்டியில் வெற்றி வாகை சூடி வருகிறார்.