சிட்னி டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஆல்ரவுண்டர் மிட்ச்செல் மார்ஷ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் மிட்ச்செல் மார்ஷ் தடுமாறி வருகிறார். இந்நிலையில், நாளைய போட்டியில் மிட்ச்செல் மார்ஷ் ஆட மாட்டார் என ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் அறிவித்துள்ளார். மார்ஷுக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் வெப்ஸ்டர் அணியில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், அறிமுக வீரர் ஆக அவர் விளையாடுவார் என்றும் கம்மின்ஸ் கூறியுள்ளார்.