மெல்போர்னில் இந்தியா இறங்கியது உருவான புது வரலாறு! - மிரண்ட ஆஸ்திரேலியா

Update: 2024-12-31 13:52 GMT

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியை, 3 லட்சத்து 73 ஆயிரத்து 691 பேர் நேரில் கண்டுள்ளதாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில், 3 லட்சத்து 50 ஆயிரத்து 535 பேர் பார்த்ததே இதுவரை சாதனையாக இருந்தது. குறிப்பாக ஐந்தாவது நாளில் மட்டும் 74 ஆயிரத்து 362 பேர் பார்த்துள்ளதாகவும், ஆஸ்திரேலிய வரலாற்றில் டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாளில் அதிக ரசிகர்கள் மைதானத்திற்கு வந்தது இதுவே முதன்முறை என்றும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்