கழுத்தை நெறிக்கும் தொடர் தோல்வி..ரோகித் ,காம்பீரை கிடுக்கிபிடியாக பிடித்த பிசிசிஐ | India | Cricket

Update: 2025-01-02 02:36 GMT

தொடர் தோல்விகளால் இந்திய அணி சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், பிசிசிஐ விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பி.ஜி.டி. தொடரில், இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்திய அணி பின்தங்கியுள்ளது. இதனால் பி.ஜி.டி. தொடரை தக்கவைக்க இந்திய அணி தவறிய நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறவும் வாய்ப்பு மங்கியுள்ளது. இதற்கிடையே முன்னணி வீரரான அஷ்வின் திடீரென ஓய்வுபெற்றதும் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்தது தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோரிடம் விசாரணை நடத்த, பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்