நீலகிரி மாவட்டம் உதகையில் , விவசாயிகளுக்கான 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தவெக கட்சியின் விவசாய அணியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இப்போராட்டத்தில், பசுந்தேயிலைக்கு கிலோவிற்கு 30 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி, காய்கறிகளை மாலையாக அணிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.