``அந்த செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும்’’ - CM ஸ்டாலினுக்கு புதுவை CM கடிதம்

Update: 2025-03-27 02:39 GMT

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விமான நிலைய விரிவாக்க பணிக்காக, தமிழக பகுதியில் தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாகவும், அதற்குண்டான செலவை தமிழக அரசே ஏற்கவும் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி, தமிழக முதலமைச்சருக்கு கடிதம் மூலமாக கோரிக்கை வைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்