மத்திய அரசின் வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவர உள்ளார். வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக எம்.பிக்கள் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், வக்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிய உள்ளார்.