மக்களவையில் பேச தனக்கு அனுமதியே கிடைப்பதில்லை என, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜனநாயகமற்ற வகையில் மக்களவை நடத்தப்படுவதாக தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதிக்கப்பட வேண்டும் என்பது மரபு என கூறிய ராகுல்காந்தி, ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு எந்த இடமும் கொடுக்கப்படுவதில்லை என ஆதங்கம் தெரிவித்தார்.