நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏப்ரல் 4ம் தேதி வரை பங்கேற்க,, பாரமுல்லா தொகுதி சுயேட்சை எம்.பி அப்துல் ரஷீதுக்கு பரோல் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு அவர் திகார் சிறையில் இருக்கும் நிலையில், பரோல் விடுப்பின்போது செல்போனை பயன்படுத்தக் கூடாது, ஊடகங்களை சந்தித்து பேசக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.