புதுச்சேரியில் அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். புதுச்சேரி பொதுப்பணிதுறை தலைமை பொறியாளர், சாலை அமைக்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், அம்மாநில பொதுப்பணி துறை அமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் அமைச்சரை கைது செய்யக்கோரி, அவரது வீட்டை முற்றுகையிட்ட முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்