மாநில நிதி நிலைக்கு ஏற்ப, புதிய காவல் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் காவல் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், காவல் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, சில அறிவிப்புகள் வரும் எனக் கூறினார்.