கடம்பூர் ராஜு எழுப்பிய கேள்விக்கு சட்டப்பேரவையில் பதிலடி கொடுத்த அமைச்சர் சாமிநாதன்
எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் வீட்டை 65 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இதுதொடர்பாக அ.தி.மு.க உறுப்பினர் கடம்பூர் ராஜு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், 3 மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்தபோதே, அந்த கட்டடம் மிக மோசமாக இருந்ததாகவும், 65 லட்சம் ரூபாய் மதிப்பில் பாரதியார் வீட்டை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.