தவெக சார்பில் வெகு விமரிசையாக நடைபெற்ற இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி - இம்தியாஸ் பங்கேற்பு

Update: 2025-03-27 02:16 GMT

வேலூரில் தவெக மேற்கு மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் இம்தியாஸ் தலைமையில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

வேலூர் மாங்காய் மண்டி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் வேலூர் மேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இம்தியாஸ் தலைமையில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக தமிழக வெற்றிக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பங்கேற்ற அனைவரும் பழம், கஞ்சி உள்ளிட்டவற்றை உண்டு நோன்பை திறந்தனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். தொடர்ந்து ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்