திமுக பேரூராட்சி தலைவர் மீது திமுக கவுன்சிலர்களே நம்பிக்கையில்லா தீர்மானம்
ஈரோடு அருகே பேரூராட்சி தலைவர் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் முடிவுகள் அறிவிக்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சியில் திமுகவைச் சேர்ந்த திலகவதி என்பவர் பேரூராட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பு முடிந்தபின் முடிவுகளை அறிவிக்காமல் செயல் அலுவலர் சென்றதால் கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.