சென்னை கோயம்பேட்டியில் அமைந்துள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா, இஸ்லாம் மீதான பற்றின் காரணமாக, தினமும் இன்ஷா அல்லாஹ் என கூறித்தான் தன் நாளை தொடங்குவதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமிய மக்களும், கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.