திமுக ஆட்சியில் விளையாட்டு போட்டிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டனூர் பகுதியில், அதிமுக சார்பில் தென்னிந்திய அளவிலான 3 நாள் கபடி போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் விளையாட்டு போட்டிகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் அவை அனைத்தும் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.