தேய்பிறை அஷ்டமியையொட்டி, ஈரோட்டில் உள்ள தென்னக காசி பைரவர் ஆலயத்தில் நடன இயக்குனர் கலா உட்பட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மூலவருக்கு பக்தர்களே இந்த தினத்தில் பூஜை செய்த நிலையில், நடன இயக்குனர் கலாவும் பூஜையில் பங்கேற்று பால் அபிஷேகம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விஜய்க்கு அரசியல் எதிர்காலம் நன்றாக உள்ளதாக தெரிவித்தார்.