பிரதான சாலையில் பாயும் புலி - ஆபத்துக்கு அருகே நின்று மிக நெருக்கமாக எடுத்த வீடியோ வைரல்

Update: 2025-01-03 02:47 GMT

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள பீர்மேடு பருந்தும்பாறை பகுதியில் சுற்றுலா பயணிகளின் கார் முன் புலி ஓன்று சாலையை கடந்து ஓடும் காட்சிகள் வெளியாகி உள்ளன. காரில் இருந்த இளைஞர்கள் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் வனத்துறையினர் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் புலியின் காட்சிகள் பதிவாகவில்லை. இந்த நிலையில், தற்போது இந்த வீடியோவின் அடிப்படையில் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்