புரட்டிப்போட்ட பேய் மழை - அடையாளமே தெரியாமல் மாறிய மாலத்தீவு.. தத்தளிக்கும் மக்கள்
மாலத்தீவில் தலைநகர் மாலியில் வெளுத்துவாங்கிய கனமழை காரணமாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. முழங்கால் அளவுக்கு சாலையில் பாய்ந்தோடிய வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கின. வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் கனமழை பெய்ததாக, அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.