போகும் போதே திடீரென உடைந்த பாலம்..அந்தரத்தில் தொங்கிய சரக்கு லாரி..குலைநடுங்கவிடும் காட்சி
சிக்கிம் மாநிலத்தின் வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு மக்கள் எளிதாக சென்று வர வசதியாக லாச்சுங் சூ ஆற்றின் குறுக்கே பிரம்மாண்டமான இரும்பு பாலம் ஒன்று 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. பெய்லி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட பாலத்தில் நேற்று அதிக பாரம் ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பாலம் திடீரென உடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரி ஆற்றில் கவிழாமல் இரும்பு தடுப்பில் சிக்கியவாறு அந்தரத்தில் தொங்கியது. சுதாரித்துக்கொண்ட டிரைவர் உடனடியாக லாரியிலிருந்து பாலத்தில் குதித்து உயிர்தப்பினார்.