வங்கக்கடலில், 5 நாட்களில் 150 கிலோமீட்டர் நீந்தி, ஆந்திராவை சேர்ந்த 52 வயது பெண் சாதனை படைத்துள்ளார். காக்கிநாடாவின் சாமலக்கோட் நகரை சேர்ந்த சியாமளா, கடந்த மாதம் 28ஆம் தேதி விசாகப்பட்டினம் ஆர் கே கற்கரையில் இருந்து காக்கிநாடா கடற்கரை வரை, சுமார் 150 கிலோமீட்டரை நீந்தி கடந்தார். முன்னதாக லட்சத்தீவு கடற் பகுதியில் 48 கிலோ மீட்டர் தொலைவை 18 மணி நேரத்தில் நீந்தி சாதனை படைத்த சியாமளாவை, லட்சதீவு சுற்றுலா மேம்பாட்டிற்காக பணியாற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.