குடலை குமட்டிய நாற்றம்..தொட்டியை எட்டிப்பார்த்து மிரண்ட மக்கள்... உள்ளே ஊறிக்கிடந்த 4 உடல்கள்

Update: 2025-01-05 04:29 GMT

மத்திய பிரதேசத்தில் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து

4 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் சிங்கரெளலி மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றின் கழிவு நீர் தொட்டியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் கழிவு நீர் தொட்டியை சோதனை செய்த போது அங்கு 4 உடல்கள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சடலங்களை மீட்ட போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்களில் ஒருவர் அந்த வீட்டின் உரிமையாளர் ஹரிதாஸ் என்பவரின் மகன் சுரேஷ் பிரஜாபதி என்றும் மற்றொருவர் கரண் ஹல்வாய் என்பதும் தெரியவந்துள்ளது. ஹரிதாஸ்க்கு சொந்தமாக 2 வீடுகள் உள்ள நிலையில் ஹரிதாஸ் குடும்பத்தோடு மற்றொரு வீட்டில் வசித்து வருகிறார் என்பதும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சுரேஷ் தனது நண்பர்களுடன் இந்த வீட்டிற்கு வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. புத்தாண்டு பார்ட்டியின் போது நண்பர்களுக்குள் நடந்த மோதலில் கொலை நடந்ததா? அல்லது வேறு யாரேனும் இவர்களை கொன்று கழிவு நீர் தொட்டியில் போட்டுவிட்டு சென்றார்களா? என்பது குறித்து சிங்கரெளலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்