ஷூவுக்குள் கேட்ட உஷ் உஷ் சவுண்ட் - ஆத்தீ எவ்வளவு பெருசு..! கொஞ்சம் உஷார் மக்களே...
கேரள மாநிலம் வயநாடு அருகே ஷூவுக்குள் பதுங்கி இருந்த நல்லப்பாம்பு திடீரென படமெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தருவனை பகுதியில் தேயிலை தோட்டத்தில் பயன்படுத்தும் ஷூவுக்குள் நல்லப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. ஷூ தானாக அசைவதை பார்த்து சந்தேகமடைந்த நபர், ஷூவுக்குள் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து வந்த வனத்துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.