#JUSTIN || விபத்தில் சிக்கியது சபரிமலை பக்தர்கள் சென்ற பேருந்து - வெளியான பரபரப்பு காட்சி
#JUSTIN || விபத்தில் சிக்கியது சபரிமலை பக்தர்கள் சென்ற பேருந்து - வெளியான பரபரப்பு காட்சி தமிழகத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர், சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்து விட்டு, மினி பேருந்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள துலாபள்ளி என்ற இடத்தில், மினி பேருந்து இறக்கத்தில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வேனில் மோதி, பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மினி பேருந்தில் இருந்த பத்துக்கும் மேற்படோர் காயமடைந்து, எருமேலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.