குஜராத்தில் பெண் ஒருவருக்கு நீதி கேட்டு, ஆம் ஆத்மி நிர்வாகி ஒருவர் தன்னைத் தானே திடீரென பெல்ட்டால் அடித்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைதான பெண் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூரத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி கோபால் இத்தாலியா, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி பெற்றுத் தராததால், தனக்கு தானே தண்டனை கொடுப்பதாக கூறி, திடீரென தான் அணிந்திருந்த பெல்ட்டை அவிழ்த்து, தன்னைத் தானே அடித்துக் கொண்டார்.