நள்ளிரவில் வீட்டிற்கு வந்த சிறுத்தை.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்.. பதைபதைக்கும் CCTV காட்சிகள்

Update: 2025-01-07 05:43 GMT

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது சிறுத்தை ஒன்று வாசல் வரை வந்து பார்த்து விட்டுச் சென்ற அதிர்ச்சிகர காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது... பாத்தாலங்கா பகுதியில் வனப்பகுதிக்கு அருகில் உள்ள சத்யநாராயணா என்பவர் வீட்டிற்குத் தான் சிறுத்தை வந்துள்ளது... நள்ளிரவு பன்னிரண்டரை மணியளவில் பதுங்கிப் பதுங்கி வந்த சிறுத்தை அங்கும் இங்கும் நோட்டமிட்டது... எதுவும் சிக்காததால் மெதுவாக நுழைவுவாயில் கதவை நோக்கிச் சென்றது. ஆனால் வெளியேறும் முன் சரியாக சிசிடிவி கேமராவை வைத்த கண் வாங்காமல் மிரட்டும் தொனியில் சிறுத்தை பார்த்த காட்சி உறைய வைத்துள்ளது. உடனடியாக சிறுத்தையைப் பிடிக்க அப்பகுதியினர் வனத்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்