சுற்றிவளைத்த காண்டாமிருகம்.. சிக்கிய தாய், மகள்.. பதறவைக்கும் காட்சிகள்

Update: 2025-01-07 06:19 GMT

அசாம் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற காஸிரங்கா வனவிலங்குகள் சரணாலயத்தில், காண்டாமிருகத்திடம் இருந்து தாய், மகள் உயிர்தப்பிய பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. காஸிரங்கா சரணாலயத்தில், பாதுகாப்பான ஜீப்களில் சென்று வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் காண ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த வகையில் ஜீப்பில் சென்றபோது கதவு திடீரென திறந்ததால், அதில் இருந்த தாயும், சிறுமியும் தவறி கீழே விழுந்தனர். அவர்களை நோக்கி காண்டாமிருகம் வந்த நிலையில், இருவரும் செய்வதறியாது அழத்தொடங்கினர். அப்போது அருகில் இருந்த ஒரு ஜீப் கதவு திறக்கப்பட்டதை அடுத்து, தாய், மகள் அதில் அவசரமாக ஏறி உயிர்தப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்