உலக நாடுகளை அலறவிட்ட அரக்கன் கஞ்சிபாணி இம்ரானுடன் தொடர்பு - TN போலீஸே யூகிக்காத திருப்பம்

Update: 2025-01-07 06:13 GMT

உலக அளவில் தேடப்படும் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனுடன் சென்னையைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல் தொடர்பில் இருந்ததாக வந்த தகவல் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

கடந்த இரண்டு மாதமாக சென்னை போலீசார் மேற்கொண்டு வரும் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் வெளிவரும் தகவல் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன

போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் போலீசாருக்கு தொடர்பு, ரியல் எஸ்டேட் என்ற பெயரில் இன்டர்நேஷனல் அளவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் என ஒவ்வொரு வழக்கிலும் அடுத்தடுத்து பல திருப்பங்கள் ஏற்பட்டது.

இந்த நிலையில் இதுவரை ஏற்பட்ட பல திருப்பங்களை எல்லாம் அதிர வைக்கும் அளவுக்கு வந்த தகவல் போலீசாரை அதிர வைத்து இருக்கிறது. இலங்கை நாட்டின் மோஸ்ட் வாண்டட் போதை கும்பலின் தலைவனாக இருந்த அங்கோட லொக்கா அந்த நாட்டு சிறையிலிருந்து தப்பி தனது அடையாளத்தை மாற்றி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் கோவையில் தங்கி இருந்ததும் பின்னர் மர்மமான முறையில் உயிரிழந்தது அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை அரும்பாக்கத்தில் 9 கிலோ கேட்டமைன் போதைப் பொருள் 50 லட்சம் பணம், 100 கிராம் தங்கம், 5 நாட்டுத் துப்பாக்கியை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக

கணேசன் உட்பட ஐந்து பேரைக் கைது செய்தனர்.

இந்த ஐந்து பேரிடமும் நடத்திய விசாரணையில் உயிரிழந்த அங்கோட லொக்காவின் சிஷ்யனான கஞ்சிபாணி இம்ரானுடன் தொடர்பிலிருந்ததாக வந்த தகவல் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்து இருக்கிறது.

கஞ்சிபாணி இம்ரான் பல நாடுகளில் தேடப்பட்டு வரும் மோஸ்ட் வாண்டட் டிரக் மாபியாவாக அறியப்படுவர். இவர் இலங்கையிலிருந்து தலைமறைவான நிலையில் துபாயில் பதுங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில் அரும்பாக்கத்தில் கைதான கும்பல் அடிக்கடி இலங்கை மற்றும் துபாய்க்குச் சென்று வந்தது இருப்பது போலீசாரின் தீவிரமான சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

உலக அளவில் தேடப்படும் குற்றவாளி ஒருவருடன் சென்னை சேர்ந்த கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற தகவல் வெளியான நிலையில் இந்த வழக்கில் மத்திய புலன் விசாரணை அமைப்புகளும் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்