லேடீஸ் ஹாஸ்டல் பாத்ரூமில் ரகசிய கேமரா.. அலறிய கல்லூரி மாணவிகள்.. தெலங்கானாவில் பெரும் பரபரப்பு

Update: 2025-01-04 02:21 GMT

தெலுங்கானாவில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவிகள் ஹாஸ்டல் குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தி வீடியோ பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் மேட்சல் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவியர் விடுதியில் உள்ள குளியலறை ஒன்றில் ரகசிய கேமராவை பொருத்தி வீடியோ பதிவு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குளியலறை வெண்டிலேட்டரில் ரகசிய கேமராவை பார்த்ததாக

மாணவிகள் குற்றம் சாட்டிய நிலையில் அங்கு பெரும் போராட்டம் வெடித்துள்ளது. மாணவியர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாணவ அமைப்பினர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இது பற்றிய தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் ஹாஸ்டல் சமையலறையில் பணியாற்றும் ஆறு ஊழியர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்களுடைய

செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வரும் போலீசார், செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட வீடியோ காட்சிகளை மீட்டெடுத்தும் ஆய்வு செய்து வருகின்றனர். ஹாஸ்டல் வார்டனிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தெலுங்கானா மாநில மகளிர் ஆணைய தலைவி பத்மஜா, அந்தக் கல்லூரியின் மாணவியர் விடுதிக்கு சென்று மாணவிகள், விடுதி ஊழியர்கள், வார்டன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்