காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-01-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-01-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines;
- பரபரப்பான அரசியல் சூழலில், ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது, சட்டப்பேரவை கூட்டத்தொடர்.... தமிழக அரசின் உரையை ஆளுநர் அப்படியே வாசிப்பாரா? என கேள்வி...
- அமலாக்கத்துறை சோதனைக்கும், டெல்லி பயணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.... சென்னை திரும்பிய அமைச்சர் துரைமுருகன் பேட்டி...
- திராவிட மாடல் அரசு, ஒரு கட்சியின் அரசல்ல, இனத்தின் அரசு என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி... சிந்துவெளி எழுத்து புதிரை விடுவிப்பவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு என்றும் அறிவிப்பு...
- முதல்வர் நிகழ்ச்சியில் மாணவிகளின் கருப்பு நிற துப்பட்டாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு பாஜக கண்டனம்.... பணியில் இருந்த போலீசார் தேவைக்கு அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் நிகழ்ந்ததாக காவல்துறை தரப்பு விளக்கம்....
- சமரசமற்ற போராட்டத்தால் தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்கு பெற்றது... தி.மு.க.வால்தான் வெளிச்சம் கிடைத்தது என்பது அதீத வார்த்தை என்றும் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி...
- சிங்காரச் சென்னை ஸ்மார்ட் கார்டு திட்டம் இன்று முதல் மாநகர பேருந்துகளில் அறிமுகம்... மின்சார ரயில்களில் பயன்படுத்தவும் திட்டம்...
- அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது குண்டாஸ் பாய்ந்தது...சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரையின்படி நடவடிக்கை...
- சீனாவில் இருந்து பரவும் வைரஸ் தொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்... அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி...
- 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை கண்டறியும் RBSK திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும்...அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவு...
- நீண்ட நாள் காதலியை மணந்தார், செஸ் வீரர் கார்ல்சன்... ஓஸ்லோ நகரில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம்...
- கால்பந்து வீரர் மெஸ்சிக்கு அமெரிக்க அரசின் உயரிய விருது.. Presidential Medal of Freedom என்ற விருது வழங்கி கவுரவிப்பு...