இந்தியாவில் பிறந்தது முதல் 'ஜென் பீட்டா' குழந்தை..இது இந்தியாவுக்கே முதல் தலைமுறை | GEN BETA
இந்தியாவின் 'ஜென் பீட்டா' Gen Beta தலைமுறையின் முதல் குழந்தை மிசோரமில் பிறந்தது தெரிய வந்துள்ளது. 2025 முதல் 2039-ஆம் ஆண்டு வரை பிறக்கும் குழந்தைகள் ‘ஜென் பீட்டா' என்ற சொல்லால் குறிப்பிடப்படுகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் முதல் 'ஜென் பீட்டா' குழந்தை, மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் பிறந்துள்ளது. ஜனவரி ஒன்றாம் தேதி நள்ளிரவு 12.03 மணியளவில் பிறந்த ஆண் குழந்தைக்கு, ஃபிராங்கி ரெம்ருவாதிகா சடேங் என்று பெயர் சூட்டப்பட்டது.