பல மணி நேர போராட்டம்..தடுப்பில் சிக்கி கதறிய யானை.. - மீட்கப்பட்ட அதிர்ச்சி காட்சிகள்
பல மணி நேர போராட்டம்..தடுப்பில் சிக்கி கதறிய யானை.. - மீட்கப்பட்ட அதிர்ச்சி காட்சிகள்
கர்நாடக மாநிலத்தில் ரயில்வே துறையினர் அமைத்த தடுப்புக்குள் நுழைந்து சிக்கித் தவித்த காட்டு யானை, பத்திரமாக மீட்கப்பட்டது. வீரஹோசனஹல்லி அருகே ஏரிக்கும் வனப்பகுதிக்கும் இடையே ரயில்வே துறையினரால் சிமெண்ட் தூணால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 15 நாட்களாக ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்திய ஒரு காட்டு யானை, அதிகாலை மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பும்போது ரயில்வே தடுப்பில் சிக்கிக் கொண்டது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் சிமெண்ட் தூணை உடைத்து, பல மணி நேரமாகப் போடிக் கொண்டிருந்த யானையை பத்திரமாக மீட்டனர்.