பீகாரில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வை ரத்து செய்யக்கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வந்த ஜன் சுராஜ் கட்சித்தலைவர் பிரசாந்த் கிஷோரை போலீசார் கைது செய்தனர். பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் கடந்த 2ம் தேதி முதல், பிரசாந்த் கிஷோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தார். போராட்டம் சட்டவிரோதம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்த நிலையில், பிரசாந்த் கிஷோரை அதிகாலையில் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து ஆம்புலன்சில் ஏற்றி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். போலீஸ் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரசாந்த் கிஷோர் ஆதரவாளர்கள் திரண்டு கோஷங்கள் எழுப்பினர். இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.