கண்ணுக்கு தெரியாத பாதை... திடீரென கிணற்றில் கவிழ்ந்த லாரி... மகாராஷ்டிராவில் பிரிந்த 2 உயிர்

Update: 2025-01-06 04:09 GMT

கண்ணுக்கு தெரியாத பாதை... திடீரென கிணற்றில் கவிழ்ந்த லாரி... மகாராஷ்டிராவில் பிரிந்த 2 தமிழர்களின் உயிர்

மகாராஷ்டிராவில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழகத்தை சேர்ந்த 2 ஓட்டுனர்கள் உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள செம்பாம்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் மற்றும்

ஆறுமுகம் ஆகியோர் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு லாரியில் லோடு ஏற்றி சென்றுள்ளனர். அவர்கள் லோடை இறக்கி விட்டு திரும்பும் போது

குண்டல் காவ் என்ற பகுதியில் பனி மூட்டம் காரணமாக சாலையோர, கிணற்றில் கவிழ்ந்து லாரி விபத்துக்குள்ளானது. இதில் சதீஷ் மற்றும்

ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து கிரேன் உதவியுடன் கிணற்றில் கவிழ்ந்த லாரி மீட்கப்பட்டது. இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. ஓரே ஊரை சேர்ந்த 2 லாரி ஓட்டுனர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்