இரவில் நடந்த சம்பவம்.. விடிந்து பார்த்த தோட்டக்காரருக்கு ஷாக் - உடனே விரைந்த போலீஸ்

Update: 2025-03-20 04:08 GMT

சேலத்தில் ரயில் நிலையம் அருகில் 100 கிலோ சந்தன மரத்தை மர்மநபர்கள் வெட்டி எடுத்து சென்றுள்ளனர்.

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்குட்பட்ட தடுப்பு சுவர் அருகே பழமை வாய்ந்த இரு சந்தன மரங்கள் இருந்துள்ளன. நள்ளிரவில் இரு மரங்களையும் இயந்திரம் வைத்து அறுத்து, அருகில் உள்ள தோட்டத்தில் வைத்து செதுக்கி, தேவையான 100 கிலோ சந்தன மரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மீதி சந்தன மரத்தை வீசி சென்றுள்ளனர். தோட்டக்காரர் தகவலின் பேரில், விரைந்த ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்