சபரிமலையில் வெடித்த சர்ச்சை... சிக்கலில் போலீசார்..? ADGP அதிரடி உத்தரவு

Update: 2024-11-26 10:47 GMT

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில்

சன்னிதானத்தில் பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், 18ம் படியில் பக்தர்கள் ஏற உதவி செய்யவும் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் 12 தினங்களுக்கு ஒரு முறை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்கள். கடந்த 15ம் தேதி நியமிக்கப்பட்ட முதல் பேட்ச் போலீசார் 18வது படிக்கட்டில் நின்று புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து சர்ச்சையானது. இந்த சம்பவத்தில் ஏடிஜிபி தலையிட்டு சன்னிதானம் சிறப்பு அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளார். செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்