எப்பேர்ப்பட்ட கொடிய நோய்களுக்கும் தீர்வு... உலகை மிரள வைத்த திட்டம் சைலண்டாக சாதித்த இந்தியா...

Update: 2025-01-10 17:18 GMT

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களின் மரபணுக்களை வெற்றிகரமாக வரிசைப்படுத்தி இந்திய ஆராய்ச்சியாளர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். இந்திய மக்கள்தொகையில் மரபணு கோளாறுகளைக் கண்டறிதல் மற்றும் துல்லிய சிகிச்சைக்கு இந்த தரவுகள் உதவும் என நம்பப்படுகிறது.

இந்திய மக்கள்தொகையின் மரபணு பன்முகத்தன்மையை பட்டியலிடும் ஜீனோம் இந்தியா திட்டம் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கால் பணிகள் முடங்கியபோதும் அவற்றை எல்லாம் திறம்பட எதிர்கொண்டு, சுமார் 10 ஆயிரம் இந்தியர்களின் முழு மரபணு வரிசைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய உயிரியல் தரவு மையத்தில் இந்த தரவுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மக்களிடையே அரிய மரபணு மாறுபாடுகளைக் கண்டறிந்து துல்லியமான மருத்துவ சிகிச்சை வழங்க இது வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. இந்த திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். இந்தியாவின் உயிரி தொழில்நுட்ப துறையில் இது ஒரு முக்கிய சாதனை என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த பத்தாண்டுகளில் உயிரி தொழில்நுட்பத் துறை 13 மடங்கு விரிவடைந்து, 2014ல் 10 பில்லியன் டாலரிலிருந்து 2024க்குள்

130 பில்லியன் டாலராக, ஜீனோம் இந்தியா திட்டம் நிறைவுபெற்றிருப்பது வரலாற்று சாதனை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

பிறவியிலேயே நிர்ணயிக்கப்படும் மரபணுக்களை மாற்றியமைக்க முடியாது என்றாலும், மரபணு அபாயங்கள் பற்றி அறிய உதவுவதுடன்

மக்கள் தங்கள் ஆபத்தைக் குறைக்க வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.

மரபணு கோளாறுகளால் ஆபத்தில் உள்ள நபர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கென, தனிப்பட்ட சிகிச்சை உத்திகளை வழங்குவதற்கு இந்த தரவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் மருத்துவ துறையில் புதிய புரட்சிக்கு வித்திடும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்