``நான் ஒன்றும் கடவுள் அல்ல… ஒரு சாதாரண மனிதன் தான்…'' படு வைரலாகும் PM மோடியின் பேச்சு

Update: 2025-01-10 16:10 GMT

முதல்முறையாக podcast-ல் பிரதமர் மோடி கலந்துரையாடிய நிகழ்ச்சியின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. Zerodha நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத்துடன் முதல்முறையாக பிரதமர் மோடி podcast-ல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சுமார் இரண்டு மணி நேரம் கலந்துரையாடி உள்ளார். இதில், தனது குழந்தை பருவம், பள்ளி ஆசிரியர்கள், அரசியல், சீன அதிபருடனான சந்திப்பு என பல சுவாரஸ்யமான தகவல்களை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

கடந்த 2002ல் நடந்த குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் குறித்து குறிப்பிட்ட பிரதமர் மோடி, "தவறு நடப்பது இயல்பான ஒன்று... எல்லாவற்றுக்கும் மேலாக நான் ஒரு சாதாரண மனிதன் தான், கடவுள் அல்ல... ஆனால், ஒருபோதும் தவறான எண்ணத்தில் தவறுகளை செய்ய மாட்டேன்" என்றும் பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்