காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11-01-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11-01-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines;
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை அறிவிப்பு.... அகில இந்திய காங்கிரஸ் தலைமை உடனான தீவிர ஆலோசனைக்கு பிறகு ஒரு மனதாக முடிவு...
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா இல்லையா? திமுக வேட்பாளரை நிறுத்த உள்ள நிலையில், அதிமுக இன்று தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்ப்பு...
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முதல் நாளில் மூன்று பேர் வேட்புமனுத்தாக்கல்.... 13, 17ம் தேதிகளில் மட்டுமே வேட்பு மனு அளிக்க முடியும் என்பதால், தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு...
- பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தண்டனையை கடுமையாக்கும் சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்..... பெண்களை பின்தொடர்ந்து தொந்தரவு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை.... கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வழங்கவும் சட்டத்தில் திருத்தம்....
- பொங்கல் கொண்டாட லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.. வாகனங்கள் அணிவகுத்ததால், பல்லாவரம் - தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்.....
- கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சிகளை கண்டுரசித்த பயணிகள்.... பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்வோரை உற்சாகப்படுத்த துள்ளல் நடனம்....
- இனிமேல் அரசு பேருந்திலும், தனியார் ஆம்னி பேருந்திலும் ஒரே கட்டணம் தான்..." தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சங்கம் உறுதி...
- நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம்... நீட் தேர்வை மாநில அரசு ரத்து செய்ய முடியாது என தெரிந்தும் திமுக வாக்குறுதி கொடுத்தது ஏன் என்று ஈபிஎஸ் கேள்வி.... இந்தியா கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால், நீட் தேர்வை நிச்சயம் ரத்து செய்திருப்போம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்....
- டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வது தொடர்பாக பரிசீலனை என முதலமைச்சர் ஸ்டாலின் பேரவையில் அறிவிப்பு... மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் நிச்சயமாக வராது என போராட்டக்காரர்களிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி...
- திருச்சி டோல்கேட் அருகே நாய் குரைத்ததால் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவம்.. படுகாயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்...