புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம்

Update: 2025-01-03 14:00 GMT

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நூதன போராட்டம் நடத்தப்பட்டது. புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 99 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 45 அடி சாலை சந்திப்பில் இருந்து காமராஜர் சிலை வரை பேரணி நடத்தப்பட்டது. அப்போது, பெட்ரோல் விலை உயர்வை குறிக்கும் வகையில், இரு சக்கர வாகனங்கள் கயிறு கட்டி இழுத்து செல்லப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்