காஷ்மீர் பள்ளத்தாக்கில் முறையாக ரயில் சேவையைத் துவங்குவதற்கு முன்பாக கத்ரா - பனிஹால் இடையே முதல் சோதனை ரயில் ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்திற்காக இந்த சோதனை ஓட்டத்தை இந்திய ரயில்வே வெற்றிகரமாக நடத்தியது. கடந்த மாதத்தில் மட்டும் 6 சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன... வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.