"பாஜகவால் மட்டுமே முடியும்.." - மேடையில் அடித்து சொன்ன பிரதமர் மோடி

Update: 2025-01-05 11:37 GMT

டெல்லியில்,12 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். உத்தர பிரதேசத்தின் சாஹிபாத் பகுதியில் இருந்து டெல்லி நியூ அசோக் விகார் இடையே நமோ பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்த பிரதமர், 6 ஆயிரத்து 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில், டெல்லி மெட்ரோ 4-ஆம் கட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து, டெல்லியின் ரோகினி பகுதியில் சுமார் 185 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கான புதிய கட்டிடத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து, ரோகிணி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கும் டெல்லிக்கும் மிக முக்கியமானவை என்றும், 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த பாரதமாக மாறும் என்றும் கூறினார். டெல்லி மற்றும் டெல்லி குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக மக்கள் பாஜகவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், டெல்லியை நவீனப்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் பாஜக அரசு செய்து வருகிறது என்றும் அவர் கூறினார். ஆளும் ஆம் ஆத்மி அரசு, டெல்லியின் பத்தாண்டுகளை வீணடித்துள்ளது என்றும், டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தாமரை மலரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் கூறினார். டெல்லிக்கு உலகிலேயே மிகச்சிறந்த தலைநகரம் என்ற அந்தஸ்தை பாஜகவால் மட்டுமே வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்