பிற நாடுகளுக்கு புலம்பெயர்வதில் சவுத்தை ஓரங்கட்டிய நார்த் -அந்த 2 மாநிலம் தான் டாப்

Update: 2025-03-21 03:26 GMT

பிற நாடுகளுக்கு புலம்பெயரும் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. உத்திரபிரதேசத்தில் இருந்து சுமார் 4 லட்சம் பேரும், பீகாரில் இருந்து சுமார் 2 லட்சம் பேரும் வளைகுடா நாடுகளில் வேலைக்காக புலம்பெயர்ந்துள்ளனர். அதே சமயம் தென் மாநிலங்களில் இருந்து பிற நாடுகளுக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நிலவரப்படி கேரளாவில் இருந்து 82 ஆயிரம் பேர் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்த நிலையில், தற்போது அது 60 ஆயிரமாக குறைந்துள்ளது. தமிழகத்தில் 78 ஆயிரமாகவும், ஆந்திராவில் 55 ஆயிரமாகவும் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்