கசிந்த விஷவாயு.. உயிரிழந்த 5000 பேர் - மக்கள் எடுத்த முடிவு.. தடியடி நடத்தி விரட்டிய போலீசார்

Update: 2025-01-03 12:41 GMT

யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து எடுக்கப்பட்ட நச்சுக்கழிவுகளை தங்களது பகுதியில் வைத்து அழிக்க பீத்தாம்பூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

போபாலில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையில் கடந்த 1984ம் ஆண்டு விஷவாயு கசிந்தது. இதனால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நாற்பது ஆண்டுகளுக்குப்பின், இந்த ஆலையில் இருந்த நச்சுக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. இந்த கழிவுகளை பீத்தாம்பூர் என்ற பகுதியில் உள்ள மறுசுழற்சி ஆலையில் வைத்து அழிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், நச்சுக்கழிவுகளை தங்கள் பகுதியில் வைத்து அழிக்க பீத்தாம்பூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள் மீது, போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்