ஆட்டோ ஓட்டுநர் துப்பாக்கியால் சுட்டு கொலை... கடைசியில் கொலையாளி போட்ட அதிர்ச்சி போஸ்ட்
கேரளாவில் முகநூல் வழியாக எச்சரிக்கை பதிவிட்ட பின்பு ஆட்டோ ஓட்டுநரை, கட்டுமான ஒப்பந்ததாரர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கைதப்புரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர், ராதாகிருஷ்ணன் புதிதாக வீடு கட்டி வருகிறார். இங்கு எழுந்த சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்கள் வந்து பார்த்த போது ராதாகிருஷ்ணன் துப்பாக்கி குண்டுக்கு பலியாகி கிடந்துள்ளார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கட்டுமான ஒப்பந்ததாரர் சந்தோஷ், ராதாகிருஷ்ணனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது தெரிய வந்தது. தனது முகநூல் பக்கத்தில் கொலை செய்ய வேண்டும் என்பது எனது லட்சியம், கட்டாயம் கொலை செய்வேன் என பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.